தமிழக ரயில் நிலைய மேம்பாட்டில் தாமதம்

தமிழக ரயில் பயணிகளுக்கு முக்கியமான அப்டேட்!

அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 77 ரயில் நிலையங்கள் மேம்படுத்த தேர்வு செய்யப்பட்டிருந்தன.

ஆனால் இதுவரை அவற்றில் 26 நிலையங்கள் மட்டுமே மேம்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை பார்க் மற்றும் செயின்ட் தாமஸ் மவுண்ட் உள்ளிட்ட சில நிலையங்கள் இதில் அடங்கும்.

சென்னை எழும்பூர் உள்ளிட்ட சில முக்கிய நிலையங்களில் பணிகள் இன்னும் பல்வேறு கட்டங்களில் உள்ளன.

ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் எப்போது முழுமையாக நிறைவடையும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *