அத்தியாவசியப் பொருட்களின் விலை – அரசு கண்காணிப்பு
தமிழகத்தில் 41 அத்தியாவசியப் பொருட்களின் விலையை அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் பாதிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ள நிலையில், அரசு விலை நிலவரத்தை கண்காணிப்பதாக உணவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் வெங்காயத்தை ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்யும் நடவடிக்கையும் பரிசீலிக்கப்பட்டுள்ளது.

